இந்தியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டி – 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப்பெற்று, தொடரை கைப்பற்றியது. இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. 4…

இந்தியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப்பெற்று, தொடரை கைப்பற்றியது.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. 4 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. நேற்று இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி ப்ரோவர்ட் கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 45 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 61 ரன்கள் எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் நிகோலஸ் பூரன், பிராண்டன் கிங் இருவரும் அதிரடியாக விளையாடினர்.

அந்த அணி 12.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்திருந்தபோது மோசமான வானிலை காரணமாக ஆட்டம் தடைபட்டது. அரை மணிநேரத்துக்குப் பின்னர் போட்டி மீண்டும் தொடங்கியது. இறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணி 171 ரன்களை எடுத்து வெற்றிப்பெற்றது. அதிகபட்சமாக பிராண்டன் கிங் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் குவித்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 3க்கு 2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.