தமிழ்நாட்டில் தொடரும் கனமழை – நாளை (டிச. 14) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

கனமழை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக…

Heavy rains continue in Tamil Nadu - In which districts will schools and colleges be closed tomorrow (Dec. 14)?

கனமழை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

நாளை(டிச.14) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்…

1, தென்காசி- பள்ளி, கல்லூரிகள்.

2, நெல்லை- பள்ளி, கல்லூரிகள்.

3, தூத்துக்குடி- பள்ளி, கல்லூரிகள்.

4. விழுப்புரம் – பள்ளிகள் மட்டும்

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்திருப்பதாவது, “நேற்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (13 -12-2024) லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக் கூடும். நாளை (14-12-2024) தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.