கனமழை எச்சரிக்கை காரணமான தஞ்சையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் மேற்கு-வடமேற்கு திரையில் நகர்ந்து 8, 9ம் தேதிகளில் வடதமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும். கனமழை எச்சரிக்கை காரணமாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தஞ்சைக்கு விரைந்துள்ளனர்.
இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக மாணவர்கள் நலன் கருதி தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
மாண்டஸ் புயல் டிசம்பர் 9ம் தேதி மாலை முதல் 10ம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







