தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக தஞ்சாவூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்து. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. நன்னிலம், குடவாசல், குளிக்கரை, மாங்குடி, சன்னாநல்லூர், உள்ளிட்ட பகுதிகளிலும், திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறித்து உத்தரவிடப்பட்டது. அதேபோல, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா