டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அசாம் மற்றும் மகாராஷ்டிராவை கனமழை புரட்டிப்போட்டுள்ளது.
அசாமில் மட்டும் ஏறத்தாழ 4 லட்சம்பேர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவின் ஜல்கான் பகுதியில் கனமழை காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 31.08 மி.மீ அளவு மழைதான் இந்த வெள்ளப்பெருக்குக்கு காரணமாக அமைந்துள்ளது. டெல்லி, என்சிஆர்- குருகிராம், மானேசர், ஃபரிதாபாத், பல்லப்கர், தோஷம், பிவானி, ஜஜ்ஜார், நர்னால், மகேந்தர்கர் மற்றும் கோசாலி ஆகிய பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக அசாம் மாநிலத்தில் ஏறத்தாழ ஆயிரம் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், 20 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விளை நிலங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அசாமின் காசிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில் கனமழை காரணமாக 10க்கும் அதிகமான விலங்குகள் உயிரிழந்தன. தற்போது சரணாயணத்தில் 70 சதவிகிதம் மழை நீரில் மூழ்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement: