சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒரு சிலிண்டர் ரூ.900ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வீ்ட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மானியத்துடன் கூடிய சிலிண்டர் ஒன்று ரூ.900.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக ஆகஸ்ட் 17ம் தேதி ரூ.25 அதிகரித்து ரூ.875.50க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல வணிக பயன்பாட்டிற்கான மானியம் இல்லா சிலிண்டர் விலை ரூ.75 அதிகரித்து ரூ.1,831.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இல்லத்தரசிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஒன்னறை மாதத்திற்கு பின்னர் ரூ.25 சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 14 நாட்களில் மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஏற்ற இறக்கத்தை வைத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக மாத்திற்கு தலா இரு முறை சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.








