முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருப்பத்தூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கோயம்புத்தூர் மாவட்டம் சின்கோனா மற்றும் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதிகளில் தலா 3 சென்டி மீட்டர் மழையும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீலகிரி மாவட்டம் தேவாலா, பார்வூட், ஹரிசன் எஸ்டேட், செருமுள்ளி, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதிகளில் தலா 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர், நடுவட்டம், கூடலூர் பஜார், தஞ்சாவூர் மாவட்டம் கிராண்ட் ஆனைகட், ஈரோடு மாவட்டம் தாளவாடி, கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், ஈரோடு மாவட்டம் பவானிசாகர், தேனி மாவட்டம் பெரியார், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருச்சி மாவட்டம் தத்தியெங்கர்பேட்டை பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“கடல்சார் வளங்களை பாதுகாக்க வேண்டும்”- பிரதமர் மோடி

Halley Karthik

இந்தியாவை பாராட்டி பேசிய பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

G SaravanaKumar

இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசி குறித்து அவதூறு; அமைச்சர் எச்சரிக்கை

Arivazhagan Chinnasamy