கடும் பனி : இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டி 20 போட்டி ரத்து…!

கடும் பனி காரணமாக லக்னோவில் நடைபெற இருந்த இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டி 20 போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணியும் ஒரு நாள் தொடரை இந்திய அணியும் கைப்பற்றியுள்ளன. இதனை தொடர்ந்து டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது இதில்  கட்டாக்கில் நடந்த முதலாவது போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்ததாக நியூசண்டிகாரில் நடந்த 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதனை தொடர்ந்து தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி 20 போட்டி இன்று லக்னோவில் நடைபெற இருந்த நிலையில் கடும் பனி காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி இப்போட்டிக்கான டாஸ்  மாலை 6 : 30 மணிக்கு போடப்பட்டு இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப் படிருந்தது.  ஆனால் அதிக மூடு பனியின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதமாகியுள்ளது.

நடுவர்கள் மாலை  6 : 50 மணி முதல் இரவு 9 : 25 மணி வரை சுமார் 6 முறை மைதானத்தின் நடுவில் இருந்து பார்வைத் திறனை ஆய்வை செய்தனர். ஆனால் நிலை விளையாடுவதற்கு ஏற்றதாக இல்லை. இதனை தொடர்ந்து  போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட டி 20  தொடரின் தற்போதைய நிலைப்படி இந்திய அணி  தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி டி 20 போட்டியானது  நாளை மறுநாள் டிச.19 ஆம் தேதி அகமதாபத்தில் நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.