தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தில் எடுத்து வரும் நிலையில், நேற்று முதல் கத்திரி வெயில் வீச ஆரம்பித்துள்ளது. இந்தியா முழுவதும் வெப்ப…

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தில் எடுத்து வரும் நிலையில், நேற்று முதல் கத்திரி வெயில் வீச ஆரம்பித்துள்ளது. இந்தியா முழுவதும் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என நேற்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக அப்பாவு பிள்ளை பேருந்து நிலையம் முழுவதும் மழை நீர் தேங்கியது. நகராட்சியின் பழைய அலுவலகம் முன்பு உள்ள சாலை பள்ளமானதால் அப்பகுதி குளம்போல காட்சியளித்தது. இதனால் அவ்வழியாக சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

அண்மைச் செய்தி: ‘பட்டினப்பிரவேசம் என்றால் என்ன? பட்டினப்பிரவேசம் எவ்வாறு நடைபெறுகிறது?’

இதேபோல, திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், சுப்பிரமணியபுரம், சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கத்தில் சிக்கித் தவித்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அடுத்த சில வாரங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வழங்கி இருந்தாலும் அவ்வப்போது பெய்யும் கோடை மழை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு மழை பெய்தது. கயத்தார், எட்டயபுரம், கழுகுமலை, விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.