தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குக் கனமழை; வானிலை ஆய்வு மையம் தகவல்

மாண்டஸ் புயல் காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மாண்டஸ்  இன்று நள்ளிரவு மகாபலிபுரம் பகுதியை ஒட்டி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்குத் தென்கிழக்கு  தற்போது  மாண்டஸ் …

மாண்டஸ் புயல் காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மாண்டஸ்  இன்று நள்ளிரவு மகாபலிபுரம் பகுதியை ஒட்டி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்குத் தென்கிழக்கு  தற்போது  மாண்டஸ்  புயலானது நிலை கொண்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஸ்ரீஹரி கோட்டா விற்கும் புதுவைக்கும் இடையே மகாபலிபுரத்தை ஒட்டி கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் குறித்த பிரதேச செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கடுமையான மழை ஆனது திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மிதமான மழையானது விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ,தேனி, தென்காசி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளிலும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், லேசானது முதல் மிதமான மழையானது மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ,தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ,தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திண்டுக்கல் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், திருப்போரூர், அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கும் மழைக்கு வாய்ப்புள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.