நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்
கனமழையும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும்
பெய்தது.
நீலகிரி மாவட்டத்தில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை
மையம் அறிவித்தது. இந்நிலையில், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார
பகுதிகளில் காலை முதலே மேகமூட்டத்தின் கூடிய காலநிலை நிலவி வந்தது.
இதனை அடுத்து, பிற்பகல் முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு இடியுடன்
கூடிய கனமழை பெய்தது.
மேலும் உதகை நகரம், மத்திய பேருந்து நிலையம், பிங்கர் போஸ்ட்,
தலைக்குந்தா, காந்தல் மற்றும் லவ்டேல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்,
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இந்த கனமழையின்
காரணமாக உதகை நகரில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து
ஓடியது.
இந்த மழையின் காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால், பொதுமக்களின்
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், உதகை மற்றும் சுற்றுவட்டார
பகுதிகளில் இரண்டாவது போகத்திற்கு, விவசாய பயிர்களை பயிரிட்டுள்ள
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கு. பாலமுருகன்







