முக்கியச் செய்திகள் தமிழகம்

விடிய விடிய மழை: மிதக்கும் சென்னை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வட கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் கனமழை முதல் மிக கனமழைக்கும், ஓரிரு இடங்களில் அதி கன மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கே.கே.நகர், கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, எழும்பூர், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், அம்பத்தூர், செங்குன்றம் உள்பட பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிக்கிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் மழை தொடர்கிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

மழை காரணமாக, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்பதால் பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.

Advertisement:
SHARE

Related posts

இரவு நேரத்திலும் பிரேதப் பரிசோதனை செய்யலாம்: மத்திய அரசு அனுமதி

Halley karthi

தெரியாத எண்ணில் இருந்து வீடியோ கால்.. போலீசார் எச்சரிக்கை!

Halley karthi

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஆதரவு அளிக்கும் இந்தியாவுக்கு நன்றி- WHO!

Jayapriya