ராணிப்பேட்டையில் திடீர் மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

நெமிலி பனப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்ததால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பனப்பாக்கம் ஓச்சேரி காவேரிப்பாக்கம் திருமால்பூர்…

நெமிலி பனப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்ததால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பனப்பாக்கம் ஓச்சேரி காவேரிப்பாக்கம்
திருமால்பூர் பல்லூர் சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக
கனமழை பெய்தது.

கடந்த சில தினங்களாக வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் மாலை நேரத்தில் பெய்த இந்த திடீர் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த தொடர் கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாகினா்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.