முக்கியச் செய்திகள் தமிழகம்

பத்திரப்பதிவுத் துறையில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் – அமைச்சர் மூர்த்தி

அதிமுக ஆட்சியின்போது பத்திரப்பதிவுத்துறையில் நடைபெற்ற ஆள்மாறாட்டம், போலி பத்திரம் ஆகியவை குறித்து விசாரிக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரையில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகள் உடனுக்குடன் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது, மதுரையில் 4 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

தடுப்பூசி முகாமை பார்வையிட்ட அமைச்சர் மூர்த்தி

மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் பத்திரப்பதிவுத்துறையில் அரசு நிர்ணயம் செய்த தொகையை விட குறைத்து பத்திரப்பதிவு செய்தவர்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

அதிமுக ஆட்சி காலத்தில் பத்திரப்பதிவுத்துறையில் நடைபெற்ற ஆள் மாறாட்டம், போலி பத்திரப்பதிவு குறித்து முதலமைச்சர் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவித்த அமைச்சர், தேர்தல் அறிக்கையில்சொல்லாத திட்டங்களையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு 2 மாதத்தில் செயல்படுத்தி வருகிறார், அதிமுக ஆட்சி காலத்தில் 10 ஆண்டு காலமாக அறிவித்த திட்டங்கள் செயல்ப்படுத்தவில்லை, குறிப்பாக மதுரையில் மோனோ ரயில் எங்கே ஓடுகிறது என தெரியவில்லை, மதுரையில் தமிழண்னை சிலை அமைக்கவில்லை, திமுக தேர்தல் அறிவிக்கையில் அறிவித்த திட்டங்களை முதல்வர் படிப்படியாக நிறைவேற்றுவார்” என கூறினார்

Advertisement:
SHARE

Related posts

இந்தோ திபெத் போலீஸ் படையில் முதன்முறையாக பெண்கள் நியமனம்

Halley karthi

27 மாவட்டங்களில் நகை, ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டன!

Ezhilarasan

செப்.12ல் நாடு முழுவதும் நீட் தேர்வு

Halley karthi