தமிழக வரலாற்றில் பெய்த அதிகபட்ச மழை – தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச கனமழை ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து…

தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச கனமழை ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 14 இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 932 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திருசெந்தூரில் 679 மி.மீ., ஸ்ரீவைகுண்டத்தில் 618 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : வெள்ள பாதிப்புகளை பார்வையிட நெல்லை விரையும் அமைச்சர் உதயநிதி!

காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது. ஒட்டு மொத்த தமிழக வரலாற்றில் நீலகிரி மாவட்டம் கக்காச்சி என்ற பகுதியில் 1992-ஆம் ஆண்டில் 24 மணிநேரத்தில் 965 மி.மீ. மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

தமிழக வரலாற்றில் சமவெளிப் பகுதிகளில் பெய்த அதிகபட்ச கனமழை இது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.