சட்டப்பேரவையில் ரேஷன் அரிசி குறித்து காரசார விவாதம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ரேஷன் அரிசி குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெற்றது. இது தொடர்பாக் அமைச்சர் திமுக எம்.எல்.ஏ சக்கரபாணி எழுப்பிய கேள்விகளுக்கு உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் பதிலளித்தார்.

அப்போது பேசிய திமுக எம்.எல்.ஏ எம்.ஏர்.கே பன்னீர்செல்வம், “தற்போது அதிகளவு திறந்தவெளியில் தான் நெல் மூட்டைகள் உள்ளது. நாங்கள் இருக்கும் பொழுது மழை வந்தால் நெல் மூட்டைகளுக்கு உரிய பாதுகாப்பு அளித்தோம். கருப்பு அரிசி இருந்த காலம் சென்று வெள்ளை அரிசியாக மாறியதற்கு நாங்கள் ஏற்படுத்திய பாதுகாப்பு தான், நெல்மணிகளை மலையில் முளைக்காமல் பார்த்துக் கொண்டும்” இன்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் “நெல்மணிகளை முழுமையான பாதுகாப்பளித்து, தூய்மையான ஆட்சியின் மூலம் அரிசிகளை ரேஷன் கடைக்கு வழங்குவதாக அவர் கூறினார். ஆனால் அவர்கள் ஆட்சிக் காலத்தில் அந்த ஆட்டிற்கும் கோழிக்கும் தான் தீவனமாக வழங்கினார்கள். ரேஷன் அரிசியை சிலர் பயன்படுத்துவதில்லை.

அப்போது குறுக்கிட்ட எம் ஆர் கே பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறார் ஏனென்றால் சர்க்கரை நோய் குறையும் என்பதற்காக. என்று பதிலளித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய கே என் நேரு, “அவை முன்னவர் எந்த அர்த்தத்தில் அதைக் குறிப்பிடுகிறார் ஆட்டுக்கும் மாட்டுக்கும் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட ரேஷன் அரிசி கொடுக்கப்பட்டதாக, உணவுத்துறை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தேன் கருப்பாக இருந்த அரிசியே தற்போது வெள்ளை அரிசியாக மாற்றி இருக்கிறோம். அப்பொழுது அரிசி கிடைக்கும் கஷ்டமாக இருந்தது, கடந்த ஆட்சியில் தான் உணவுத்துறை பாதுகாப்பாக குடோன்கள் அமைக்கப்பட்டது. நெல் முட்டைகளை நனையாமல் வைத்துப் பாதுகாத்தோம். அவை முன்னவர் கூறியது போல் ரேஷன் அரிசியினை ஆட்டுக்கு மாட்டுக்கும் வழங்கவில்லை அனைத்து மக்களும் அதனை சாப்பிடுகிறார்கள். அதை சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறைகிறது என்பதற்காக ரேஷன் அரிசி சாப்பிடுகிறார்கள் நீங்கள் எப்படி காலையில் எழுந்து நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் உடலுக்கு நல்லது என்று கூறுகிறீர்களோ அதே போன்று ரேஷன் அரிசி அனைத்து மக்களும் பயன்படுத்துகிறார்கள்.” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.