அப்போ வில்லன் நடிகர்… இப்போ கோயில் பூசாரி !

சில நடிகர்களுக்குப் பின்னே மற்றொரு முகம் இருப்பது ஆச்சரியமில்லை. அப்படித்தான் பிரபல மலையாள நடிகர் பாபு நம்பூதிரியும். மலையாள சினிமாவில் கடந்த 40 வருடங்களில் 215-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாபு நம்பூதிரி, வில்லன்…

சில நடிகர்களுக்குப் பின்னே மற்றொரு முகம் இருப்பது ஆச்சரியமில்லை. அப்படித்தான் பிரபல மலையாள நடிகர் பாபு நம்பூதிரியும்.

மலையாள சினிமாவில் கடந்த 40 வருடங்களில் 215-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாபு நம்பூதிரி, வில்லன் குணசித்திரம் வேடங்கள் உட்பட பல தரப்பட்ட வேடங்களில் நடித்துள்ளார். மம்மூட்டியின் நிறக்கூத்து, மோகன்லாலில் தூவானத்தும்பிகள் உட்பட பல்வேறு படங்களில் அவர் நடிப்பு பேசப்பட்டிருக்கிறது.

நடிகராக அறியப்பட்ட இவர், இப்போது பூசாரியாகவும் இருக்கிறார். கோட்டயம் குருவிலங்காடு பகுதியில் உள்ள மன்னைக்காடு கணபதி கோயிலுக்கு சென்றால் இவரை பூசாரியாக பார்க்கலாம். ஆனால், அவர் இதைத் தொடர்ந்து செய்வதில்லை. இவர்களின் 300 வருட பழமையான குடும்ப கோயிலான இதன் மேல்சாந்தி வர இயலாதபோது, அதை இவர் பொறுப்பேற்று நடத்துகிறார்.

‘பள்ளியில் படிக்கும்போதே, பூஜைகள் பற்றிய விஷயங்களை தெரிந்துகொண்டேன். மேல்சாந்தி (தலைமை பூசாரி) வர இயலாதபோது, நான் அதை நடத்துவேன். அதுதான் என் கர்மா. இந்த கோயிலில் வழக்கமான வழிபாடுகள் நடைபெறுகின்றன. நம்பூதிரி சமூகத்தில் இப்போது சிலருக்கு பூஜைகள் செய்ய தெரிகிறது. ஆனால், அடுத்த தலைமுறைகளுக்கு இதில் விருப்பம் இல்லை’ என்கிறார் பாபு நம்பூதிரி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.