திரைப்பட இயக்குநரே வியக்கும் வண்ணம் நடிகர் திலகம் நடித்த ஒரு காட்சியின் பின்னணி தெரிந்ததும் படப்பிடிப்பு குழு வியப்பில் ஆழ்ந்தது. ஒத்திகையே இல்லாமல் பாடல் காட்சியில் நடித்த அவரது சிறப்பு திறமை உள்ளிட்ட சில சம்பவங்களின் தொகுப்பு இது… வாருங்கள் பார்க்கலாம்…
சொர்க்கம் திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வாதன் இசையில் இடம்பெற்ற பொன்மகள் வந்தாள் பாடல் இன்றைக்கும் மயங்க வைக்கும். நடிகர் திலகம் சிவாஜியின் ஸ்டைலான நடிப்பு, விஜயலலிதாவின் கவர்ச்சி ஆட்டம் என அந்தக்கால இளசுகளை கட்டிப்போட்ட பாடல். 100 நாட்கள் ஓடி வெற்றிகண்ட சொர்க்கம் திரைப்படத்தில், பலமுறை ஒன்ஸ்மோர் கேட்ட பாடலை, படம் முடிந்ததும் மீண்டும் ஒருமுறை பொன்மகள் வந்தாள் பாடலை திரையிடுவார்களாம்.
வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், ராஜராஜ சோழன் போல மேலும் பல வரலாற்று படங்களில் நடிக்க நினைத்தார் சிவாஜி கணேசன். ஆனால், அது நிறைவேறவில்லை. தான் நடிக்க ஆசைப்பட்ட கதாபாத்திரங்களை சிறு காட்சிகளாக நடித்து தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டார் சிவாஜி, சொர்க்கம் திரைப்படத்தில் ஜூலியஸ் சீசராக நடித்தார். தன் நண்பர்களாலேயே கத்தியால் குத்தி கொல்லப்படும் காட்சியில், கே.பாலாஜி கடைசியாக குத்தும்போது ‘யூ டூ புரூட்டஸ்” என்றபடி சிவாஜி, ரத்த வெள்ளத்தில் விழுவார்.
இந்தக்காட்சியின் முடிவில், இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா சொல்லாத ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சிவாஜி… உயிரிழக்கும் நிலையில் வலிப்பு வந்தவரைப்போல் சிவாஜி நடித்திருப்பார். காரணம் கேட்டபோது ரோமானிய மன்னரான சீசருக்கு வலிப்பு நோய் இருப்பதை படித்து தெரிந்திருந்ததால் அவ்வாறு நடித்ததாக பின்னர் தெரிவித்தார் சிவாஜி.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







