ஊழலுக்கு எதிராக உதவி எண்: பஞ்சாப் முதலமைச்சரின் முதல் அதிரடி

பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைன் எண்ணை தொடங்க இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். பஞ்சாப்பில் யாரும் எதிர்பாராத வகையில் ஆம் ஆத்மி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப்…

பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைன் எண்ணை தொடங்க இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்பில் யாரும் எதிர்பாராத வகையில் ஆம் ஆத்மி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக பகவந்த மான், பகத்சிங்கின் சொந்த கிராமத்தில் நேற்று பதவியேற்றார். இந்த நிலையில் ஆம் ஆத்மியின் பிரதான முழக்கமான ஊழல் ஒழிப்பு தொடர்பாக புதிய முயற்சியை பஞ்சாப் அரசு மேற்கொண்டுள்ளது.

ஊழல் இல்லாத பஞ்சாப்தான் ஆம் ஆத்மியின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று எனக் குறிப்பிட்ட பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், தியாகிகள் தினத்தன்று ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைன் எண்ணை தொடங்க இருப்பதாகவும், அது தனது தனிப்பட்ட வாட்ஸ் அப் எண்ணாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், அதை வீடியோ அல்லது ஆடியோ பதிவு செய்து எனக்கு அனுப்புங்கள். ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம், பஞ்சாப்பில் ஊழல் நடக்காது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானின் அறிவிப்பு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,

அண்மைச் செய்தி: அவந்தான் மகா நடிகன்…

“யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் இல்லை என்று சொல்லாதீர்கள். அதற்கு பதிலாக அந்த உரையாடலை பதிவு செய்து வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள். உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் மாநில அதிகாரிகள் நேர்மையாக வேலை செய்ய வேண்டும் எனவும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

  •  தீபா, மாணவ ஊடகவியலாளர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.