டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக் கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு பரவலை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் 2019ல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.
மழைக்காலங்களில் கொசு உற்பத்தியாவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.







