ஆலங்கட்டி மழை பெய்து பார்த்திருப்பீர்கள்…. மீன் மழை பெய்து பார்த்திருக்கிறீர்களா?

ஆந்திர மாநிலத்தில் மீன் மழை பெய்ததால் மக்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர். மழை என்றாலே மகிழ்ச்சி தான்… புயலோ வெள்ளமோ ஏற்படும் போது தான் பாதிப்புகளை ஏற்படுத்தும். இவற்றை தவிர இயல்பாக எப்போது மழை பெய்தாலும்…

ஆந்திர மாநிலத்தில் மீன் மழை பெய்ததால் மக்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.

மழை என்றாலே மகிழ்ச்சி தான்… புயலோ வெள்ளமோ ஏற்படும் போது தான் பாதிப்புகளை ஏற்படுத்தும். இவற்றை தவிர இயல்பாக எப்போது மழை பெய்தாலும் அது மக்களை மகிழ்விக்கும். அதிலும் கோடை வெயில் தகிக்கும் போது மழை பெய்தால் சொல்லவே வேண்டாம். மழையால் உருவாகும் குளிர்ந்த சூழலை மக்கள் கொண்டாடி தீர்ப்பர். இது நாடு கடந்து உலக மக்கள் யாவர்க்கும் பொறுந்தும்.

இப்படி மழை பெய்யும் போது சில நேரங்களில் நாம் ஆலங்கட்டி மழை பெய்வதை பார்த்திருப்போம். ஆனால் ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வஜ்ரப்பு கோனேரி என்னும் கிராமத்தில் மீன்மழை பெய்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது.

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு
மழை பெய்து வந்திருக்கிறது. இந்நிலையில் வஜ்ரப்பு கோனேரி கிராமத்தில்
ஆகாயத்திலிருந்து மழை நீருடன் சேர்ந்து மீன்களும் விழுந்திருக்கிறது. அந்த மீன்கள் சாலைகளில் விழுந்து தண்ணீரில் தத்தளிக்கும் காட்சி தற்போது
வைரலாக பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.