அரசுப் பள்ளிக்காக நிதி திரட்டிய அமைச்சர் – மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பு!

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்காக அமைச்சர் சா.மு.நாசர் 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியதோடு கவுன்சிலர், கட்சி நிர்வாகிகளிடம் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை நிதித் திரட்டியது…

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்காக அமைச்சர் சா.மு.நாசர் 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியதோடு கவுன்சிலர், கட்சி நிர்வாகிகளிடம் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை நிதித் திரட்டியது மாணவர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.



சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள அரசினர் பள்ளியில் திமுக இளைஞரணி சார்பில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. திமுக மாநில
இளைஞரணித் துணைச் செயலாளர் பிரபு கஜேந்திரன் ஏற்பாட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பை
முன்னெடுக்கும் விதமாக 1000 பள்ளி மாணவர்களுக்கு ஸ்டீல் வாட்டர் பாட்டில்
மற்றும் சீருடை வழங்கப்பட்டன.

அதேபோல் பள்ளி மாணவர்கள் அமர ஷெட் அமைக்க 2 லட்சம் நிதி வழங்கப்பட்டது. இதனை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு வழங்கினார்.பின்னர்
பேசிய அவர் தமிழ்நாட்டில் உள்ள 1086 அரசுப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை
உணவு திட்டத்தால் வருகைப்பதிவு உயர்ந்துள்ளதாக மாநில திட்டக்குழு
தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

மாணவர்கள் பயில தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகக் கூறினார்.இதனிடையே நிகழ்ச்சியின் போது அருகே இருந்த கவுன்சிலர்களிடம் 4 லட்சம்  ரூபாய் வரை நிதித்திரட்டினார். மேலும் பள்ளிக்காக எம்.எல்.ஏ
நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தார்.பள்ளிக்காக அமைச்சர் நிதித் திரட்டிய செயல் மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.