உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கலகத் தலைவன்’ திரைப்படம் 3 வருட போராட்டத்திற்கு பிறகு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை கலகத் தலைவன் பூர்த்தி செய்ததா என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் 3 வருட போராட்டத்திற்கு பிறகு ’கலகத் தலைவன்’ திரைப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் உதயநிதி உடன் நிதி அகர்வால், கலையரசன், ஆரவ் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கலகத் தலைவன் படம் வெளியாகி உள்ளதால் இந்த படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.
கார்ப்பரேட் நிறுவனத்தால் எளிய மக்கள் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதை கலகத் தலைவன் படத்தின் மூலம் பதிவு செய்துள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி. இதற்கு முன்பு அவர் இயக்கிய தடம், தடையர தாக்க, மீகாமன் உள்ளிட்ட படUdhayanidhi Stalinங்களை போலவே இந்த படத்திலும் தன்னுடைய தனி பாணியை அவர் பின்பற்றியுள்ளார். குறிப்பாக இப்படம் பொருளாதாரத்தை பற்றி பேசுவதால் பொருளாதாரம் குறித்த நிறை குறைகளை பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் சரி செய்துள்ளார்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசு நிறுவனங்களை குறைந்த விலைக்கு வாங்குவதால் சிறு சிறு நிறுவனங்கள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதையும் அதனை நம்பியுள்ள பொது மக்கள் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் பதிவு செய்துள்ள கலகத் தலைவன் திரைப்படம், உதயநிதி ஸ்டாலினின் சினிமா பயணத்தில் முக்கிய திரைப்படமாக இருக்கும்
என்பதில் மாற்றுக் கருத்தில்லை.







