முக்கியச் செய்திகள் தமிழகம்

கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு- உயர்க்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி பேராசிரியர்களும் ஓவர் கோட் அணிய வேண்டும் என உயர் கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் உயர்கல்வித் துறை கடிதம் எழுதி உள்ளது.

இதுகுறித்து அனைத்து கல்லூரிகளுக்கம் உயர்கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும். பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கி அணிய வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

உயர்கல்வித்துறையில் இருந்து கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

#HBDRajini – தமிழகமெங்கும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

Nandhakumar

அதிமுகவில் ஏதாவது நடக்குமா என ஸ்டாலின் எதிர்பார்க்கிறார்: செல்லூர் ராஜு

Nandhakumar

’திமுகவின் நிலைப்பாடு – மாநில சுயாட்சி’ – திமுக செய்தித்தொடர்புச் செயலாளர்

Arivazhagan Chinnasamy