அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் தேசிய கொடியின் தேவை அதிகரிக்கும் என்பதால் சூரத்தில் தேசியக் கொடி தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்த வருடம் முழுவதும் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எற்பாடு செய்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து நாட்டின் 75 பகுதிகளில் 75 வாரங்களுக்கு இந்த கொண்டாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதன் தொடக்க நிகழ்ச்சியாக குஜராத் மாநிலம் சபர்மதி பகுதியில் இருந்து 21 நாட்கள் தண்டி பகுதிக்கு செல்லும் பாத யாத்திரையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்துவது, நாட்டில் உள்ள 75 கடற்கரைகளை சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக ஹர் ஹர் ட்ரையாங்கா என்ற நிகழ்ச்சிக்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஹர் ஹர் ட்ரையாங்கா என்பது ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுதல் என்பது பொருளாகும்.
இதையடுத்து வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் 75வது சுதந்திர தினத்தின் போது நாட்டு மக்கள் அனைவரும் ஆகஸ்ட் 13 முதல் 15ந்தேதி வரை அவரவர் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்காக குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள துணிகளை வடிவமைக்கும் ஆலைகளில் தேசிய கொடியை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாட்டு மக்கள் அனைவரின் இல்லங்களிலும் தேசியக் கொடியை காட்சிப்படுத்த வேண்டும் அல்லது தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பால் தேசியக் கொடியின் தேவை அதிகரிக்கும் என்பதால் அதனை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.








