8 மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு புதிய இல்லங்கள்

8 மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான, மன வளர்ச்சி குன்றியோருக்கான புதிய இல்லங்கள் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், திருநெல்வேலி, சேலம், திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய 8…

8 மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான, மன வளர்ச்சி குன்றியோருக்கான புதிய இல்லங்கள் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், திருநெல்வேலி, சேலம், திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான, மன வளர்ச்சி குன்றியோருக்கான புதிய இல்லங்கள் அமைக்கப்படும். தகுதி வாய்ந்த தன்னார்வ நிறுவனங்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்களை வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு செய்து அந்நிறுவனங்கள் மூலம் புதிய இல்லங்கள் அமைக்கப்படும்.

செலவினங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் மற்றும் இல்லத்தில் அனுமதிக்கப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பளிப்பு செய்யப்படும். ரூ. 1,04,38,400 மிகாமல் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.