தர்மதுரை திரைப்படத்தில் இடம்பெற்ற “ஆண்டிபட்டி கணவா காத்து” பாடல் யூ டியூப்பில் 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று பகிர்ந்திருந்த நிலையில், இன்று அந்த பாடலை பாடிய செந்தில் தாஸ், நியூஸ் 7 தமிழுக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்த படம் தர்மதுரை. இப்படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, தமன்னா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்ததோடு, ராதிகா சரத்குமார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகவும் இயல்பான கதைக்களம் கொண்ட இத்திரைப்படம் ரசிகர்களிடையே அந்த சமயம் பெரும் வரவேற்பை
பெற்றிருந்ததோடு, படத்தில் இடம் பெற்றிருந்த அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. இதற்கு காரணம், இடம் பொருள் ஏவல் படத்திற்கு பிறகு மீண்டும் கவிஞர் வைரமுத்து மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியமைத்து பெரும்பாலான பாடல்களை உருவாக்கி இருந்ததால் தான். குறிப்பாக படத்தில் வரும் மக்கா கலங்குதப்பா, போய் வாடா பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததை தொடர்ந்து, எந்த பக்கம் காணும் போது பாடலிற்காக கவிஞர் வைரமுத்துவிற்கு தேசிய விருதும் கிடைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதே போல், படத்தின் முக்கிய பாடலான “ஆண்டிப்பட்டி கணவா காத்து” பாடல் அன்று பட்டி தொட்டி எல்லாம் கலக்கியதோடு, இன்றும் பலரும் ரசிக்கும் பாடலாக இருந்து வருகிறது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு இந்த “ஆண்டிபட்டி கணவா காத்து” பாடல் யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை கடந்ததை தொடர்ந்து, கவிப்பேரரசு வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கே உரிய பாணியில் ஒரு பதிவை பெருமிதத்தோடு பகிர்ந்திருந்தார்.
அந்த வரிசையில் இந்த பாடலை பாடிய பாடகர் செந்தில் தாஸ், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக வீடியோ அனுப்பியுள்ளார். அதில் இந்த பாடல் உருவாக காரணமாக இருந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்ட பலருக்கு நன்றி தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
“ஆண்டிப்பட்டி கனவாக் காத்து” பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்தது மகிழ்ச்சியளிக்கிறது
– பாடகர் செந்தில் தாஸ் பிரத்யேக வீடியோ#Dharmadurai | #ஆண்டிப்பட்டிகனவாக்காத்து | #Song | #Singer | #SenthilDoss | #Lyrics | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/Q2vHrOSJYW
— News7 Tamil (@news7tamil) June 27, 2023
- பி.ஜேம்ஸ் லிசா