“அனைவருக்கும் தேசிய விண்வெளி தின நல்வாழ்த்துகள்” – நயினார் நாகேந்திரன்!

நம் விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பும், அறிவின் மீதான தாகமும் இந்தியாவின் விண்வெளிப் பயணத்திற்கு புதிய சிறகுகளை அளித்து வருகின்றன என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “விண்மீன்களை ரசித்த தலைமுறையிலிருந்து, விண்வெளியை ஆராய்ந்து உலகையே வியக்க வைக்கும் தலைமுறையாக நம் பாரத தேசம் உயர்ந்து நிற்கிறது! நம் விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பும், அறிவின் மீதான தாகமும் இந்தியாவின் விண்வெளிப் பயணத்திற்கு புதிய சிறகுகளை அளித்து வருகின்றன.

சந்திரனைத் தொட்ட சந்திரயான் முதல் சூரியனை நோக்கிய ஆதித்யா-L1 வரை, ஒவ்வொரு சாதனையும் இந்தியாவின் அறிவியல் ஆற்றலையும், கனவுகளின் உயரத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.