ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“கண்ணியம், சம உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்புக்காக நாம் அனைவரும் தொடர்ந்து ஒன்றுபட்டு நிற்போம்” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். இது, ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இடையிலான வலுவான உறவை வெளிப்படுத்தியுள்ளது.
திருமாவளவனின் சமூக நீதிப் போராட்டத்தையும், சமத்துவத்துக்கான அவரது பங்களிப்புகளையும் ராகுல் காந்தி இதன் மூலம் அங்கீகரித்துள்ளார். மேலும், பாஜக அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை உணர்வை இந்த வாழ்த்துச் செய்தி மேலும் வலுப்படுத்துவதாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த வாழ்த்து, சமூக வலைதளங்களில் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள்,தொண்டர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.







