இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளையொட்டி, எனது சகோதரனாக, மகனாக, குடும்பமாக இருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம்-2 படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்ஜய் தத், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகின்றது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்களால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் காத்துள்ளனர். மேலும் லியோ படத்தின் ப்ர்ஸ்ட் ப்ரொமோ வீடியோவை வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது 37வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தனது ட்விட்டரில் லோகேஷ் கனகராஜூக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், எனது சகோதரனாக, மகனாக, குடும்பமாக இருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். கடவுள் உங்களுக்கு எல்லா வளத்தையும் கொடுக்கட்டும். உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களுடன் நான் இருப்பேன் என பதிவிட்டுள்ளார்.
நடிகர் சஞ்சய் தத்தின் இந்த உருக்கமான பிறந்தநாள் வாழ்த்து செய்தியை லோகேஷ் கனகராஜின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.