சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மாணவி ஸ்ரீமதியின் உடல், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு துறை அமைச்சர் கணேசன் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாணவியின் பெற்றோர் அழுதபடியே வந்து உடலை பெற்றுக் கொண்டனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இறுதிச்சடங்குக்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கனியாமூரில் மாணவி உயிரிழந்தது முதல் இதுவரை நடைபெற்று வந்த நிகழ்வுகளைப் பார்ப்போம்.
- கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
- மாணவி உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி 13ம் தேதி முதலே பெற்றோர்கள் போராட்டம்
- 14ம் தேதி முதல் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
- பிரேத பரிசோதனையில் சந்தேகம் உள்ளதாக கூறி மாணவர்கள் உறவினர்கள் பல்வேறு அமைப்புகளுடன் போராட்டம் நடத்தினர்.
- தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டம் 17ம் தேதி வன்முறையாக வெடித்தது.
- மாணவி பிரேத பரிசோதனை போது தங்கள் தரப்பு மருத்துவரை இணைந்து மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் தரப்பு மனு தாக்கல்.
- உயர்நீதிமன்ற உத்தரப்படி சிறப்பு மருத்துவ குழுவினர் அமைத்து மறுபரித பரிசோதனை நடைபெற்றது.
- 19ம் தேதி மறு பிரேத பரிசோதனை நடைபெற்றது.
- பெற்றோர் மறு பிரேத பரிசோதனையில் பங்கேற்கவில்லை.
- உச்ச நீதிமன்றத்தை நாடிய பெற்றோர்.
- உயர்நீதிமன்றத்திடம் நிவாரணம் பெற உச்ச நீதிமன்றம் உத்தரவு.
- 11 நாட்களாக மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
- மகளின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் 22ம் தேதி உத்தரவிட்டது.
- மகளின் உடலை 23ம் தேதி பெற்றோர் பெற்றுக் கொண்டனர்.








