நீதிமன்ற உத்தரவுப்படி பெற்றோர்கள் உடலை பெற்றுக் கொள்ள உள்ளனர். கள்ளக்குறிச்சியில் இருந்து சொந்த ஊரான பெரியநெசலூருக்கு மாணவி ஸ்ரீமதி உடல் இன்று எடுத்து செல்லப்படுகிறது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சியில் இருந்து கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் செல்லும் சாலையை காவல் துறையினர் தங்களது கட்டுப்பாடிற்குள் கொண்டு வந்து, பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பாக விழுப்புரம் எஸ்.பி தலைமையில் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் இரண்டு ஐஜிகள் ஒரு டிஐஜி, 6 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
இதேபோல் மாணவியின் உடலை கொண்டு செல்ல இரண்டு எஸ் பிகள், ஆறு காவல் ஆய்வாளர்கள் இரண்டு அதிரடிப்படை வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாணவி உடலுக்கு அவரது சொந்த ஊரான பெரியநெசலூர் பகுதியில் இறுதிச் சடங்குகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இறுதிச் சடங்கில் உள்ளூர் மக்களை தவிர வேறு யாரும் பங்கேற்க கூடாது என காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
“அமைதியான முறையில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” அவர் தெரிவித்தார்.








