திருப்பூரில் கணவர் மாரடைப்பால் இறந்த செய்தியை கேட்டு மனைவியும் இறந்த சம்பம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 77). இவர் கோவை-திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு நெய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவராக உள்ளார். இவரது மனைவி கருப்பாத்தாள்(வயது 68) இவர்களுக்கு செந்தில் முருகன் மற்றும் ரஜேந்திரன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
பழனிச்சாமி நேற்று இரவு 10 மணி அளவில் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவரது இறப்பு செய்தியை கேட்டு அவரது மனைவி கருப்பாத்தாள் அவர்களும் இன்று காலை 7 மணி அளவில் மரணம் அடைந்தார்.
இருவரின் உடல்களும் சோமனூரில் உள்ள விசைத்தறி சங்க அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் சோமனூரில் இருந்து அவர்களின் சொந்த ஊரான அய்யம் பாளையத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது.
இருவரின் உடல்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் ஆயிரக்கனக்கான பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். திருமணம் ஆகி 50 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து சாவிலும் இணை பிரியா தம்பதியினரினர் மரணம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.







