ஹைதி நிலநடுக்கம்; 2 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

ஹைதி நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,189ஆக அதிகரித்துள்ளது. வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்று ஹைதி. இங்கு கடந்த 14ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவானது.…

ஹைதி நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,189ஆக அதிகரித்துள்ளது.

வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்று ஹைதி. இங்கு கடந்த 14ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவானது. ஹைதி தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்து தரை மட்டமாகின. அந்த இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் ஆபத்தன நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்த பலரும் தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,189 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்புகள் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால், சுமார் 1 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 30 ஆயிரம் குடும்பங்கள் வீடு இழந்துள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.