முக்கியச் செய்திகள் தமிழகம்

10-ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

10-ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 23-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, வரும் 23-ஆம் தேதி காலை 11 மணி முதல், 31-ஆம் தேதி வரை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்குப் பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவற்றை அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்களுக்குக் குறுஞ்செய்தி வழியாக அரசுத் தேர்வுத் துறையின் மூலம் 21.08.2021 அன்று காலை 11.00 மணிக்கு அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் http://www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில், தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 23-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் வாக்குபதிவு நிறைவு!

Halley karthi

இந்திய மருத்துவர்கள் தினம்: முதலமைச்சர் வாழ்த்து

Vandhana

குஜராத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு: பிரதமர் இரங்கல்

Halley karthi