முக்கியச் செய்திகள் இந்தியா

மசூதிக்கு சொந்தமான 1700 ச.அடி நிலம் காசி விஸ்வநாத் டிரஸ்ட்டுக்கு பரிசாக தரப்பட்டது

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதிக்குச் சொந்தமான 1,700 ச.அடி நிலம் காசி விஸ்வநாத் டிரஸ்ட்டுக்கு பரிசாக தரப்பட்டுள்ளது.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் கோயிலில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயிலுக்கான பாதை விரிவுபடுத்தப்படுகிறது. பாதையை விரிவு படுத்துவதற்கு தேவைப்படும் நிலத்தில் வக்பு வாரியத்துக்குச் சொந்தமான கியான்வாப்பி மசூதியின் அறை ஒன்று அமைந்திருந்தது.

இந்த நிலையில் கியான்வாப்பி மசூதி அறை அமைந்துள்ள 1700 ச.அடி நிலம் காசி விஸ்வநாத் டிரஸ்ட்டுக்கு பரிசாகத் தரப்பட்டுள்ளது. பதிலுக்கு காசி விஸ்வநாத் டிரஸ்ட்டுக்கு சொந்தமான நிலம் ஒன்றும் கியான்வாப்பி மசூதிக்கு தரப்பட்டுள்ளது.
9ம் தேதி இதற்கான ஒப்பந்தத்தை காசி விஸ்வநாத் கோயில் டிரஸ்ட் தலைமை செயல் அதிகாரி சுனில்குமார் வர்மா இறுதி செய்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

உதயநிதிக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்?- அமைச்சர் செல்லூர் ராஜூ!

Jayapriya

பெற்றோரை இழந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Saravana Kumar

தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் டெல்லி செல்கிறோம் – வைகோ

Jeba Arul Robinson