பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, பிரதமர் மோடி மற்றும் இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, மீது 7 பிரிவுகளின்…

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, பிரதமர் மோடி மற்றும் இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் தலைமறைவான ஜார்ஜ் பொன்னையாவை போலீசார் தேடி வந்தனர். இன்று காலை விருதுநகர் அருகே கள்ளி குடியில் ஜார்ஜ் பொன்னையாவை போலீசார் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர் அருமனை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜார்ஜ் பொன்னையாவை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கும்படி நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.