ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ரிபெல்’ – ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு!

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரிபெல் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதில் கேப்டன் மில்லர், டைகர் நாகேஸ்வர ராவ், வணங்கான் ஆகிய திரைப்படங்கள்…

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரிபெல் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதில் கேப்டன் மில்லர், டைகர் நாகேஸ்வர ராவ், வணங்கான் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இவர் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான ‘அடியே’ திரைப்படம், கலமையான விமரிசனங்களைப் பெற்றது.

இதனைதொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில், ஞானவேல் ராஜா தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘ரிபெல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்குகிறார். இந்த படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

https://twitter.com/gvprakash/status/1717519232442016170?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1717519232442016170%7Ctwgr%5E12ced81d8ea3638b798b71f2f2622bd74de81101%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2023%2Foct%2F27%2Frebel-first-look-poster-release-4096431.html

இந்த படத்துக்கு அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘ரிபெல்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.