நகைச்சுவை படமாக உருவாகியுள்ள ‘குலு குலு’ திரைப்படம் வெளியானது.
நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் நடிகர் சந்தானம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, மாறன், சாய் தீனா, டி எஸ் ஆர் எனப் பலர் நடித்துள்ளனர்.
அண்மைச் செய்தி: ‘அன்பைப் பொழிந்த சென்னையே; மகிழ்ந்த பிரதமர்’
இன்று வெளியான இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியான போதே ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆக்சன் கலந்த நகைச்சுவை கதையில் இப்படம் உருவாகி இருக்கிறது. அத்தோடு இந்த படத்தில், தாடி வைத்த கெட்டப்பில் வித்தியாசமான காஸ்டியூமில் சந்தானம் நடித்துள்ளார். “சுத்தி கோமாளிகளை வச்சுக்கிட்டா முட்டாள் கூட அறிவாளியாகத்தான் தெரிவான்” என்ற வசனம் டீசர் வெளியான போதே பரவலாகப் பேசப்பட்டது.








