செஸ் பலகையாக மாறிய டீ கடை!

தேநீர் அருந்த வருபவர்கள் சற்று நேரம் செஸ் விளையாடிவிட்டுச் செல்லலாம். மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது. இப்போட்டி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், 187 நாடுகளைச் சேர்ந்த…

தேநீர் அருந்த வருபவர்கள் சற்று நேரம் செஸ் விளையாடிவிட்டுச் செல்லலாம்.

மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது. இப்போட்டி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், 187 நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைத்தார். இவ்விழாவுக்காகச் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு அரசு சார்பில் செஸ்குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் ராட்சச பலூன்கள், ஒலிம்பியார் ஜோதி, விழிப்புணர்வு பேரணிகள் எனப் பிரம்மாண்டமாக விளம்பப்படுகின்றன.

அண்மைச் செய்தி: ‘நகைச்சுவை படமாக உருவாகியுள்ள ‘குலு குலு’’

இந்நிலையில், சென்னை நேப்பியர் பாலத்திற்கு அடுத்தபடியாக, அண்ணா நகரில் உள்ள டீக்கடையில் செஸ் தீம் உருவாக்கி, வாடிக்கையாளர்களுக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார் அக்கடையின் உரிமையாளர் ஜோசப். இவர், தன்னுடைய டீக்கடை முழுவதும் செஸ் தீம் உருவாக்கியதோடு மேசையில் செஸ் போர்டுடன் டீ அருந்தும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.