முக்கியச் செய்திகள் தமிழகம்

10 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

தமிழ்நாட்டில் 6 வயதுக்கு உட்பட்ட 10.26 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு மகளிர் தொண்டு நிறுவனத்தின் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ., பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், 5 ஆண்டுகளுக்கான தேர்தல் அறிக்கையைத் தான் திமுக வெளியிட்டதாகவும், ஆட்சிக்கு வந்து ஓராண்டு தான் ஆவதாகவும், எஞ்சிய நாட்களுக்குள் நிச்சயம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நிர்பயா திட்ட நிதி அனைத்து துறைகளிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், காலை சிற்றுண்டி திட்டத்தை முதற்கட்டமாக மலைவாழ் பகுதிகள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அமல்படுத்த உள்ளாட்சித் துறையுடன் இணைந்து திட்டமிட்டு வருவதாகவும், சத்துணவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யும் நடவடிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும், சத்துணவு ஊழியர்களின் நலன் காக்கும் அரசு தான் திமுக அரசு என்றும் அங்கன்வாடி பணியாளர்களின் பணிப்பளுவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக காவல்துறையுடன் இணைந்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், குழந்தைகள் பாதுகாப்புக்காக செயல் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும், முதியோர் பாதுகாப்புக்காக தனி அலகு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பெண்களுக்கான தனி வரவு செலவு திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாகவும், சட்டத்துக்கு முரணான செயல்களில் குழந்தைகள் ஈடுபடுவதைத் தடுக்க சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

சத்துணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு கீரை, சுண்டல், சத்தான அரிசி உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லை என்றும் கூறிய அமைச்சர், மாநிலத்தில் 6 வயதுக்கு உட்பட்ட 10.26 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 2 லட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஊட்டச்சத்து குறைபாடைப் போக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போலீசுக்கு சவால் விட்ட நடிகை மீரா மிதுன் கேரளாவில் கைது

Gayathri Venkatesan

உதயமானது நியூஸ் 7 தமிழ் ஹெல்த் யூட்யூப் சேனல்

Arivazhagan Chinnasamy

“இஸ்ரோவில் மீண்டும் வாழ்ந்தது போல் இருந்தது”- மயில்சாமி அண்ணாத்துரை நெகிழ்ச்சி

Web Editor