பணமழையில் நனைந்த குஜராத் பாடகி!! ரூ.4.5 கோடி வசூல்

குஜராத்தின் பிரபல பாடகி கீதா பென் ரபாரியின் இசை நிகழ்ச்சியில் அவருக்கு ரசிகர்கள் பணமழை பொழிந்தனர். பிரபல குஜராத் பாடகி கீதா பென் ரபாரி அவர் எங்கு சென்று பாடினாலும் அவருக்கு நல்ல வரவேற்பும்,…

குஜராத்தின் பிரபல பாடகி கீதா பென் ரபாரியின் இசை நிகழ்ச்சியில் அவருக்கு ரசிகர்கள் பணமழை பொழிந்தனர்.

பிரபல குஜராத் பாடகி கீதா பென் ரபாரி அவர் எங்கு சென்று பாடினாலும் அவருக்கு நல்ல வரவேற்பும், பணமழை அபிஷேகமும் நடைபெறும். கட்ச் கிராமத்தில் பிறந்த கீதா, ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே பாட தொடங்கினார். இவரது இசை பலரையும் கட்டிப்போட்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் கட்ச் நகரில் உள்ள ராப்பரில் நேற்று இரவு கீதா பென் ரபாரி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியின் போது பாடகிக்கு பண அபிஷேகம் நடைபெற்றது. கீதா ரபாரி நோட்டு மழை பொழிந்து நிகழ்ச்சியை நடத்தும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இந்த வீடியோவை கீதா பென் தனது இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்துள்ளார். இதில் ரூ.4.50 கோடி நன்கொடை கிடைத்ததாக கீதா கூறியுள்ளார். மேலும் பசுக்களைப் பாதுகாப்பதற்காக இவ்வளவு நிதி வழங்கிய அனைவருக்கும் நன்றி” என கூறி உள்ளார்.

சமீபத்தில், அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சியில், அவருக்கு டாலர் மழை பொழிந்தது அப்போது அவர் மீது ரூ.2.25 கோடி டாலர் பணமழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.