குஜராத்: திடீரென இடிந்து விழுந்த வகுப்பறை சுவர் – பதற வைக்கும் வீடியோ!

குஜராத் தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறை சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில், வகோடியா சாலையில் உள்ள ஸ்ரீ நாராயண்…

குஜராத் தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறை சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில், வகோடியா சாலையில் உள்ள ஸ்ரீ நாராயண் குருகுலப் பள்ளி அமைந்துள்ளது. அப்பள்ளியின் முதல் தளத்தில் அமைந்திருந்த வகுப்பறையின் ஒரு பக்கச்சுவர் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்கட்ட சிகிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவனின் உடல்நிலை தேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின் போது இச்சம்பவம் நடந்ததாக பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார். பள்ளி முதல்வர் ரூபால் ஷா, “பலத்த சத்தம் கேட்டதையடுத்து நாங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தோம். ஒரு மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மற்ற மாணவர்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினோம். வாகனங்கள் நிறுத்துமிடத்தின் மீது சுவர் இடிந்து விழுந்ததால், பல வாகனங்கள் சேதம் ஏற்பட்டுள்ளன” இவ்வாறு தெரிவித்தார்.

தகவல் கிடைத்தவுடன் வதோதரா தீயணைப்புத் துறை குழுவினர் பள்ளிக்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனியார் பள்ளியில் வகுப்பறை சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.