குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தின் பார்டோலி நகர் யுவா என்ற கிராமத்தில் இருந்த தேசிய நெடுஞ்சாலையில் சூரத்தில் இருந்து துலேவுக்கு மகாராஷ்டிர மாநில அரசு பேருந்து சென்றுள்ளது. அதே சமயம் சாலிஸ்கயோனில் இருந்து சூரத்திற்கு மற்றொரு பேருந்து சென்றுள்ளது. அப்போது திடீரென ஒரு பேருந்து டிராக்டர் மீது மோதியதால் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை தாண்டி மறுபக்கத்தில் வந்த பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பர்தோலி சிவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் மோதி விபத்துகுள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழ்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு மகாராஷ்டிரா மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.




