85 வயதில் கின்னஸ் சாதனை

85 வயதான மார்கரெட் ஆம்ஸ்ட்ராங் என்ற பெண்மணி, கின்னஸ் சாதனை படைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். பொதுவாக வயதாகினால் கூர்மையான பார்வைத் திறன் கொண்ட விளையாட்டுகள் விளையாடுவது கடினம் என நினைத்திருப்போம். ஆனால், சாதனைக்கு வயது தடையில்லை…

85 வயதான மார்கரெட் ஆம்ஸ்ட்ராங் என்ற பெண்மணி, கின்னஸ் சாதனை படைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

பொதுவாக வயதாகினால் கூர்மையான பார்வைத் திறன் கொண்ட விளையாட்டுகள் விளையாடுவது கடினம் என நினைத்திருப்போம். ஆனால், சாதனைக்கு வயது தடையில்லை என்பதற்கு உதாரணமாக  இங்கிலாந்தை சேர்ந்த 85 வயதான மார்கரெட் ஆம்ஸ்ட்ராங், உலகின் வயதான பெண் ஸ்குவாஷ் வீராங்கனையாக கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளார். அவர் ஒரு வாரத்திற்கு இரண்டு முறை ஸ்குவாஷ் விளையாடுகிறார் எனவும், அவர் முன்னாள் கவுண்ட்டி ஸ்குவாஷ் வீரர் என்றும் கின்னஸ் உலக சாதனை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எட்டு வயதில் இருந்தே கால்பந்து விளையாடுவதில் ஆர்வம் காட்டிய இவர் நார்த் லண்டனிலுள்ள நாட்டுத்வுட் ஸ்குவாஷ் கிளப்பில் சேர்ந்துள்ளார். கிளப்பில் சேர்ந்த பிறகு அங்குள்ள பயிற்சியாளர் அவரின் திறமையை கண்டு மேலும் அவரை ஊக்குவித்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கார் விபத்தில் காலில் அடிபட்டு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: இசையமைப்பாளர் இளையராஜாவை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? – ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

அந்நிலையிலும் விளையாடுவதை நிறுத்தாமல் வாரத்திற்கு இரண்டு முறையாவது கால்பந்து மற்றும் சில நேரங்களில் டென்னிஸ் விளையாடி பயிற்சி பெற்று வந்துள்ளார். பிரிட்டிஷ் ஓபனில் மூன்று முறை வெற்றி பெற்ற எகிப்திய வீரர் அபோ டலேப்பிடம் ஸ்குவாஷ் பயிற்சி பெற்று வந்துள்ளார் மார்கரெட் ஆம்ஸ்ட்ராங். மேலும், உலக சாதனைக்கு விண்ணப்பித்த அவர், வயதான பெண் ஸ்குவாஷ் என்ற டைட்டிலை பெற்றுள்ளார்.

கால்பந்து மற்றும் ஸ்குவாஷ் தவிர இங்கிலாந்து தேசிய நெட்பால் அணியில் அவர் உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ஸ்குவாஷ் எனக்கு மிகவும் பிடிக்கும், எனக்கு பிடித்ததை நான் செய்வதால் என்னால் இந்த வயதிலும் விளையாட முடிகிறது” என்கிறார்.

  • அ.மாரித்தங்கம், மாணவ ஊடகவியாலாளர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.