குற்றம்

ஜோலார்பேட்டை அருகே நிச்சயம் செய்யப்பட்ட காவலர் விஷம் குடித்து தற்கொலை!

ஜோலார்பேட்டை அருகே நிச்சயம் செய்யப்பட்ட காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வக்கணம்பட்டி ஊசிநாட்டான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் பூவரசன். இவர், கோவையில் காவலராக பணியாற்றி வந்தார். பூவரசன் குடியானம்குப்பம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவீட்டார் சம்மதத்துடன் காதலித்த பெண்ணுடனேயே அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயம் முடிந்ததை அடுத்து பூவரசனை காணவில்லை. அவரை கண்டு பிடிக்க முடியாததால், பூவரசனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, செல்போன் லொகேஷன் மூலம் பூவரசனை தேடிய போலீசார், ஏலகிரி மலைப்பகுதியில விஷம் அருந்திய நிலையில் அவர் சடலமாக கிடந்ததை கண்டுபிடித்தனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை; கணவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

Halley karthi

தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது வெளிநாட்டு பெண்களும் பாலியல் புகார்

Gayathri Venkatesan

100 ரூபாய்க்காக நண்பரை கொலை செய்தவருக்கு 14 ஆண்டுகள் சிறை!

Jayapriya

Leave a Reply