உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக 150 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச் சரிவால் தௌலிகங்கா ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் கட்டுக்கடங்காத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பு தொடர்பாக அம்மாநில முதலமைச்சருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். டெல்லியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படைகள் உத்தரகாண்ட் விரைந்துள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியும், உத்தரகாண்ட் முதலமைச்சரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மீட்பு நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். இதற்கிடையே, வெள்ள பாதிப்பு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.