45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் சீதாராமன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக காணொலியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், 20 மாதங்களுக்கு பிறகு மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது குறித்தும், கொரோனா காலத்தில் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட சில பொருட்களின் கால அவகாசம் வரும் 30ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளதால் அது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர மாநில அரசுகளிடம் இன்று கருத்து கேட்கப்படுகிறது. முதற்கட்டமாக இயற்கை எரிபொருள்களை ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.