2024-ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024-ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.  தேர்வாணையத்தின் திருத்தியமைக்கப்பட்ட 2024-ஆம் ஆண்டிற்கான தேர்வுகால அட்டவணை இன்று (ஏப். 24) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும்…

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024-ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. 

தேர்வாணையத்தின் திருத்தியமைக்கப்பட்ட 2024-ஆம் ஆண்டிற்கான தேர்வுகால அட்டவணை இன்று (ஏப். 24) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 6244 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.

துணை ஆட்சியர், டிஎஸ்பி போன்ற 90 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. 2020 காலி பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ, ஐஐடி அளவிலான 730 பணியிடங்கக்களுகான தொழில்நுட்ப பிரிவு தேர்வுகள் நவம்பர் 17 ஆம் தேதி நடைபெறும்.

குரூப்-4 தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவும் நிறைவடைந்துவிட்டது.
இந்த நிலையில், குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த மார்ச் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டது. குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 27-ஆம் தேதி கடைசி நாளாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.