தனியார் பங்கு சந்தையில் முதலீடு செய்து தினமும் 5 முதல் 10 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்ற பேராசை காட்டி பலரை ஏமாற்றி ரூபாய் 5 கோடி பண மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ரயில் நகர் 7வது தெருவில் வசித்து வரும் 32-வயதான சிவசங்கரி தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையரிடம் கடந்த ஜுலை மாதம் 23ம் தேதி பண மோசடி புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
சிவசங்கரி வசிக்கும் வீட்டின் எதிர் வீட்டில் காமாட்சி, கார்த்திகேயன் தம்பதிகள் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பல்வேறு பங்கு சந்தைகளில் முதலீடு செய்து தினமும் 5 முதல் 10 லட்சம் லாபம் சம்பாதிப்பதாகவும், இதில் பணம் முதலீடு செய்ததால் நிறைய லாபம் எங்களுக்கு கிடைக்கின்றது என்று சொல்லி சிவசங்கரியிடம் பணம் கேட்டுள்ளனர்.
முதலில் மறுத்து வந்த சிவசங்கரி பின்னர் ஒப்பு கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி ரூபாய் 16 லட்சத்து 50 ஆயிரத்தை மூன்று தவணைகளாக
சிவசங்கரி வங்கி கணக்கில் இருந்து காமாட்சி மற்றும் விக்னேஷ்வரன் வங்கி
கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளார். ரூபாய் 16,50,000 பங்கு சந்தையில் முதலீடு செய்ததை தொடர்ந்து ஒரு மாதம் மட்டும் ஊக்க தொகை என கூறி 9.9.2021ம் தேதி ரூபாய் 50 ஆயிரம் மட்டும் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் பனம் ஏதுவும் கொடுக்கவில்லை என்றும், காரணம் கேட்டால் (Income tax problem) வரிமான வரித்துறை பிரச்சனை என்ற காரணம் காட்டி காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த சிவசங்கரி ரூபாய் 16 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
இதையடுத்து ஐகோட் மகாராஜன் என்ற பெயரில் காசோலையை காமாட்சி கொடுத்துள்ளார். இந்த காசோலையை சிவசங்கரி வங்கி கணக்கில் செலுத்தியபோது insufficient என்று வந்ததுள்ளது. இதனால் காமாட்சியை தொடர்பு கொண்டு சிவசங்கரி கேட்டபோது பிசினஸில் பிரச்சனை ஆகிவிட்டது என கூறிய அவர்கள் பணத்தை கொடுத்துவிட்டு காசோலையை திரும்பி வாங்கி கொள்வதாக கூறி போனை துண்டித்துவிட்டனர்.
பங்கு சந்தையில் டிரேடிங் செய்வதாக கூறி பொதுமக்கள் நம்பும் வகையில் பல
பொய்யான விஷயங்களை சொல்லி நம்ப வைத்து பலரை ஏமாற்றி சுமார் 5 கோடி மோசடி
செய்துள்ள காமாட்சி, கார்த்திகேயன், விக்னேஸ்வரன். இவர்களுக்கு உடந்தையாக
செயல்பட்டு ஐகோட் மகாராஜன், பத்ரகாளிமுத்து, புவனேஸ்வரி, மகேஸ்வரி, ஜெகநாதன்,
ஆகியோர் மீது தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார்
403, 406, 420, 465, 34 ipc ஆகிய பிரிவீன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் காமாட்சி மற்றும் விக்னேஷ்வரன் இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.







